பால் சேகரிப்பில் நெஸ்லே லங்கா சாதனை
இது குறித்து நெஸ்லே லங்கா பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அலோயிஸ் ஹொஃப்பர் தெரிவித்துள்ளதாவது, ”இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவது என்பது நெஸ்லே நிறுவனத்தின் முக்கிய அர்ப்பணிப்புகளில் ஒன்றாகும். பின்தங்கிய பிரதேசங்களை பால்பண்ணை விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் எமது நீண்ட கால வியாபாரத்துக்கு முக்கிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
நெஸ்லே நிறுவனத்தின் மூலம் பின்தங்கிய பொருளாதாரத்துக்கு இவ்வருடம் 2.5 பில்லியன் ரூபா பங்களிப்பு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நெஸ்பிரே, மைலோ, மில்க்மெயிட் மற்றும் நெஸ்டமோல்ட் போன்ற தயாரிப்புகளுக்கு உள்நாட்டு பாலை பயன்படுத்துவதாக நெஸ்லே அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக